
கடற்கரை மணலின்
நம் காலடி சுவடுகளை
அலை வந்து அழித்தது
நினைவிருக்கிறதா?
உறங்காத இரவுகளில்
நிமிடங்கள் நாட்கள் கடந்தும்
இறவாத குறுந்தகவல்கள்
நினைவிருக்கிறதா?
விண்மீன்கள் எண்ணிக்கொண்டே
முற்றத்தில் நிலா ரசித்து
நான் எழுதிய கவிதைகள்
நினைவிருக்கிறதா?
குடையில்லா மழை காலத்தில்
அரசமர நிழலில்
விரல் பிடித்து ஒதுங்கிய நாட்களை
நினைவிருக்கிறதா?
எங்கோ நீ சென்றாலும் உன் வாசம் பிடித்து
உன் அருகில் நான் கடக்கும் வேளை
எனை பார்த்தது நீ உதிர்க்கும் புன்னகை
நினைவிருக்கிறதா?
சனிக்கிழமை அனுமார் கோவிலில்
பிரகார சுற்றில் சுகமாய் இடித்து
உனை நான் கடந்து சென்றது
நினைவிருக்கிறதா?
வேதனைகள் உனை தின்ன
என் சட்டையில் முகம் புதைத்து
நீ அழுத நாட்களை
நினைவிருக்கிறதா?
நம் காதலில் எச்சமாய்
மிஞ்சிய உன் நினைவுகளை
எண்ணி வாழும் எனை
நினைவிருக்கிறதா?
No comments:
Post a Comment