Monday, March 4, 2013


நமக்கான நம் தேடல் தொலைந்து
எனக்கான உன் தேடல் தொடர்கிறது
என் இறந்தகாலங்கள் இறக்கவில்லை
இறந்தது என் நிகழ காலங்கள் மட்டுமே
என் வருங்காலங்கள் மட்டும் வாழுமா?
நீ வருவாய் என்றால் !!
கனவுகளில் மட்டுமே வாழ்கிறேன்
நிகழ் களின் நிஜங்கள் துரத்தாமல்
உனக்கான என் தேடல் முடிவதில்லை
எனக்கான என் வாழ்வு முடியும்வரை
நீ வருவாய் என்று எதிர்பார்த்து இருப்பேன்
இல்லையென்றால் நமக்காய் காத்திருப்பேன் - கல்லறையில்

முரண்


நம்மிடையே இரகசியங்கள் கூடாதென்று 
துப்பட்டாவை சரி செய்கிறாள் 
எனை பார்த்தபடி -என்னவள் 
உன் விரல் பட்ட வெட்கத்தில் 
விழுந்து கிடக்கிறேன் 
உன் வீட்டின் கோலமாக

மழை காலத்து மயக்கங்கள்

மழை காலத்து மயக்கங்கள் 
காதலியின் முத்தத்தை போல 
மறக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது
எனக்கான இடத்தை விட்டு தராமல் 
உனக்கான இடத்தை கேட்டு பெறாமல் 
நம்மை நாமே தொலைத்து விட்டோம் 

விடிகிற வரைக்கும் தேடிவிட்டோம் 
விடிந்த பின்பு மறந்து விட்டோம் 
அடுத்த இரவுக்கு காத்திருந்தோம் 

விடியும் வரை அழுதோம்
விடிந்த பின் மறந்தோம் - நம்மை 
மறந்ததாய் நாமே நடித்தோம்

இரவுக்கும் தெரியும் தேடல் 
முடிவதில்லை என்று -நமக்கும் தெரியும் 
நாம் கிடைப்பதில்லை என்று 

 உனக்கான வலிகள் கூட 
 சுகமாய் இனிக்கிறது - எனக்கான 
 இனிப்புகள் நீ இன்றி கசக்கிறது

Thursday, May 24, 2012

கனவாகி போன நினைவுகளும்
பழுதாகி போன நம் வாழ்க்கையும்
நம்மை மன்னிக்க மனம் இல்லாமல்
மறைந்தோடி போனதடி!

Tuesday, December 7, 2010

அன்பே

இதயத்தை திருடும் உன்
இயல்பான சிரிப்பு
மறக்க நினைத்தாலும் மரித்துவிடுகிறேன்

தேவதையா நீ மோகினியா
இரவு தூக்கத்தில்
தினம் என்னை இம்சிக்கிறாய்

பிரிவா பரிவா
எதைஅடி நீ சொல்கிறாய்
புரியா கணிதமாய் உன் கண்கள்

நொடிககளும் நிமிடங்களுமாய்
கடந்த என் பகல் பொழுது
இரவில் மட்டும் யுகமாய் தொடர்கிறது

வாழ்வின் கடைசி நொடியாய்
இன்றே வாழ்ந்திட மனம் துடிக்கிறது

இரவின் எச்சங்களாய் தொடர்ந்து
இம்சிக்கும் நட்சத்திரங்கள் உனை
பார்த்ததும் கண்சிமிட்டி கரைகிறதே