Saturday, December 4, 2010

முடிவு

முத்தங்களின் ஈரம் காயவில்லை இன்னும்
பேசிய வார்த்தைகள் கரையவில்லை இன்னும்
அணைப்பின் பிடி தளரவில்லை இன்னும்

எனக்காய் உன்னிடம் ஒரு சுமையும்
உனக்காய் என்னிடம் ஒரு இடமும்
நிரப்பபடாமல் இன்னும்

சொல்லபடாத வார்த்தைகளுடன்
எழுதப்படாத வாக்கியங்களுடன்
முற்று பெறாத ஓர் கவிதை

நமக்காய் நமக்கான காதலை
சுகமாய் தொடர்ந்த நம் பயணம்
இதோ ஜனிக்கிறது அதன் மரணம்

3 comments: