Saturday, December 4, 2010

என் தேடல்கள்

மழை விட்ட மரங்களில்
முளைக்கும் சிறு நீர் துளிகளாய்
தொலைத்த நினைவுகளோடு
தனிமையில் ஓர் பயணம்

யாருக்கும் சொந்தமின்றி
காற்றில் ஒரு கானம்
ஏனோ என்னை தழுவுகையில்
கண்ணில் சிறு ஈரம்

காரணங்கள் தெரியாத காரியங்கள்
விடை தெரியாத சில விடியல்கள்
தெரிந்தும் புரியாமல் சில வேளைகள்
புரிந்தும் தெரியாமலும் சில வேளைகள்

நினைவுகளும் தூரமாகி போன வேளை
நிமிடங்கள் மட்டும் சொந்தமகுமோ?
நிஜங்களும் விலகி போன வேளை
நிழல்கள் மட்டும் தொடருமோ?

விடை தெரியாத இரவுகளும்
விடிய மறுக்கும் பகல்களும்
நீண்ட நெடிய பாதைகளும்
கண நேரமும் சுமையாகி போனது

தேடல் என்பது முடிவுறா பயணம்
நிஜங்கள் வேண்டாம் என்றும் -
அதன் நினைவுகள் போதும்
தொடரும் என் தேடல்கள்

1 comment: